Thursday 30 December, 2010

திருவண்ணாமலையில் நித்தியானந்தா: போராட்டம்-கோவில் பின்வாசல் வழியாக ஓட்டம்

திருவண்ணாமலை: தனது 34வது பிறந்த தினத்தையொட்டி திருவண்ணாமலை கோவிலுக்கும் தனது ஆசிரமத்துக்கும் வந்த 'குஜால்' சாமியார் நித்யானந்தாவுக்கு எதி்ர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனால் கோவிலில் இருந்து வெளியேறுவதிலும், ஆசிரமத்துக்கு செல்வதிலும் அவருக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டது. போலீஸார் மற்றும் பக்தர்களின் பாதுகாப்புடன் அவர் பத்திரமாக ஆசிரமம் போய்ச் சேர்ந்தார்.

ஆண்டுதோறும் தனது பிறந்த நாள் விழாவை திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள தனது ஆசிரமத்தில் நித்யானந்தா கொண்டாடுவது வழக்கம்.

Wednesday 29 December, 2010

சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம். (1)

ஆஹா பதில் கிடைத்து விட்டது.
(பார்க்க : http://charuonline.com/blog/?p=1598)

கேள்வி பதில்

2.நீங்கள் தானே தினமலரில் எழுதும் அந்துமணி?

அருண் குமார்

பதில்:
ஆம்; நானேதான்.  அந்துமணி என்ற பெயரில் மட்டும் அல்ல; பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன், புஷ்பா தங்கதுரை, ராஜேஷ் குமார், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் போன்ற பெயர்களில் எழுதுபவனும் நானே.  ஞாநி என்ற பெயரில் கல்கியில் இப்போது அரசியல் கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  தமிழில் மட்டும் அல்ல; துருக்கியிலும் ஓரான் பாமுக் என்ற பெயரில் எழுதி வருகிறேன்.  சந்தேகம் இருந்தால் கீதையின் இந்த ஸ்லோகங்களைப் பார்த்துக் கொள்ளவும்.

ஸ்ரீபகவான் கூறுகிறார்: “பார்த்த! இப்பொழுது நீ என்னுடைய நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் பற்பல விதங்களாகவும் பல நிறங்களும் பல உருவங்களும் கொண்டவையாகவும் உள்ள தெய்வீகமான உருவங்களைப் பார்.
(அத்தியாயம் 11, ஸ்லோகம் 5)

20.12.2010.
11.24 a.m.
Comments are closed.

ஆகா, சாரு என்னை கலாய்ச்சிடாரே.

அனாலும் அவர் பதிலை விட அவர் மேற்கோள் காட்டிய கீதையின் ஸ்லோகம் மிக அருமை.

சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம்.

சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம் என்று தெரிந்த உடன், சில கேள்வி கணைகளை தயார் படுத்தி வைத்திருந்தேன்.

கேள்விகள்  இதோ,

Tuesday 28 December, 2010

நித்தியானந்தாவின் சத்சங்கம்

சென்னை நகர் முழுவதும் இப்போது ஓட்ட பட்டிருக்கும் போஸ்டரில் உள்ளவை இது தான்,

"திருவண்ணமலையில் டிசம்பர் 29 அன்று பரமஹம்ச நித்தியானந்தரின் சத்சங்கம் நடைபெறுகிறது. அனுமதி இலவசம்."


Sunday 26 December, 2010

டிசம்பர் 26 , 2004௦.

டிசம்பர் 26 , 2004௦. இன்றும் என் வாழ்வில் மறக்க முடியாத தினம்.

ஆகஸ்ட் 2004 :
வழக்கமாக CBSE பள்ளியில் படிக்கும் என் மாமா மகனுக்கு நான் தான் ஹிந்தி  மற்றும்  கணக்கு  பாடம்  தவிர  மீத  பாடங்களை கற்று  கொடுப்பேன். பரீட்சை நேரம் அது.

மறுநாள் சமூக அறிவியல் பரீட்சைக்கு தயார் ஆகிகொண்டிருந்தன் தம்பி.ஆம் என்னை அண்ணன் என்று தான் அழைப்பான் அவன்.

Saturday 25 December, 2010

சாருவின் சரசம்-சல்லாபம்-சாமியார்-எதிர்வினை

நான் எழுதிய சாருவின் சரசம்-சல்லாபம்-சாமியார்க்கு வந்த எதிர்வினைகளால் இதை எழுதிகிறேன். (சாருவின் சரசம்-சல்லாபம்-சாமியார்,கமெண்ட்ஸ் பார்க்கவும்)

 கமெண்ட்ஸ் எழுதிய அனைவரும் சாருவின் வலைதளத்தில் இருந்து தானே என்னுடைய லிங்கிற்கு வந்தீர்கள்.உங்கள் விமர்சனத்தை charuonline -இல் பதிவு செய்து இருக்கலாமே? கண்டிப்பாக பதில் கிடைத்திருக்கும்.

புத்தகத்தை  படித்து தெரிந்து கொண்டதை தானே எழுதினேன். பிறகேன் நண்பர்களே இந்த வலைதளத்தை சண்டை களமாய் மாற்ற நினைக்கிறீர்கள்.

Thursday 23 December, 2010

பாட்டி சொல்லும் கதைகள்

அன்பு  நண்பர்களே, நம்மை இன்றும் தான் பேரன் பேத்திகளாக நினைத்துகொண்டு  நமக்காக மிக அருமையான  கதைகளோடு  காத்துகொண்டிருகிறார்   நமது ருக்மணி பாட்டி.

கதை கேட்க இங்கே  அழுத்தவும் பாட்டி கதைகள்.

Wednesday 22 December, 2010

சாருவின் சரசம்-சல்லாபம்-சாமியார்

அன்பு நண்பர்களே,  சாருவின் சரசம்-சல்லாபம்-சாமியார் படித்து முடித்து விட்டேன்.இனி கீழே வருவது புத்தகத்தின் விமர்சனம் அல்ல.வேறு எப்படி என்றாலும் எடுத்துகொள்ளுங்கள்.

சாரு, சரசம்-சல்லாபம்-சாமியார் என்ற டைட்டிலுக்கு  முதலில் copyright வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் ஏனனில் பிற்காலத்தில்  பட அதிபர்களிடம் நாம் சண்டைக்கு செல்ல நேரிடும்.அவ்வளவு அருமையான, பொருத்தமான டைட்டில் இது.

Monday 20 December, 2010

தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளி விடுவது சரியா?

குடித்து விட்டு வண்டில் ஓட்டினால் அபராதம் மேலும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்/அபகரிக்கப்படும் என்பது செய்தி.
அன்பர்களே நண்பர்களே , பார் என்ற ஒன்று இருப்பதனால் தானே குடிமகன்கள் குடித்து விட்டு வீட்டிற்கு செல்கின்றனர். மேலும் வகைதொகையாக கப்பம்  கட்டுகிறார்கள் . சிலர்  மட்டையாகி சாலையில்  செல்லும் சிலருக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள் .பாதி பேர் விபத்துகுளாகின்றனர்.இது போல சில இன்னல்கள் அவர்களுக்கும் அவர்களால் பலருக்கும் ஏற்படுகிறது.

Wednesday 15 December, 2010

சாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள்

வாழ்கையில் நான் கலந்து கொண்ட முதல் புத்தக வெளியீட்டு விழா இது.


குமுதம்,குங்குமம், விகடன் மட்டுமே படித்து கொண்டிருந்த நான், இந்திரா சௌந்தரராஜன் அவர்களது சில புத்தகங்களை வாங்கி படித்தேன் (சிறு வயதில் நான் பார்த்த அவரது  கதைகளில் உருவான சீரியல்களால் ஏற்பட்ட  தாக்கத்தினால்).புதிய அனுபவம் கிடைத்தது.


பின்னர் ஒரு நாள் நண்பர் மூலம் சாரு பற்றி கேள்வி பட்ட நான்,அவருடைய இணையதளம் மூலம் அவரை பற்றி மேலும் தெரிந்து, படித்து கொண்டேன்.அவரது எழுத்துகளால் உதிர்த்த மூன்று புத்தகங்களை வங்கி படித்து பத்திரமாக வைத்து இருக்கிறேன்.


இன்று வரை ஒரு நாளும் அவர் வலைத்தளத்தை படிக்காமல் இருந்ததில்லை.அவரால் பெரிதும் ஈர்க்க பட்டேன்.


கதைக்கு வருவோம்:

டிசம்பர் 13 மாலை 5 :45 க்கு, காமராஜர் அரங்கத்திற்கு சென்றடைந்தேன்.வாயிலில் ஒரு பெண்மணி எல்லோரையும் மிக அன்பாக  வரவேற்று கொண்டிருந்தார்.அப்போதுதான் கணிமொழி,தமிழச்சி மற்றும் பாலகுமரன் வந்திறங்கினர்.


 அவர்களையெல்லாம் தாண்டி உள்ளே சென்றால் உயிர்ம்மை பதிப்பகத்தினர் ஒரு மேஜையில் சாருவின் 7 புத்தகங்கள் விற்று கொண்டிருந்தனர். சற்றும் தாமதிக்காமல் 7 புத்தகங்களையும்  வாங்கி என் பையினுள் வைத்துவிட்டேன்.


பிறகு நாலடி எடுத்து வைத்ததும் ஒருவர் சிரித்த முகத்தோடு தண்ணீர் பாட்டிலும் சில தின் பண்டங்களும் கொடுத்தார்.அதையும் வங்கி கொண்டு உள்ளே சென்றால் அப்பப்பா எவ்வளவு  பெரிய அரங்கம் அருமையான இசையால் மிதந்து கொண்டு இருந்தது.


நடு வரிசை ஒரு சீட்டில் இடம்  பிடித்து கொண்டேன்.அப்போது மிஷ்கினும் மதனும் என்னை கடந்து சென்றார்கள். ஆர்வம்  அதிகரித்து விட்டது.


மேடையில் பிரம்மாண்டமான பேனரில் சாருவுடைய போட்டோவும் அவரது புதிய புத்தகங்களின் முகப்பும் பொறிக்கப்பட்டு இருந்தது .


சிறிது நேரத்தில் சாரு கண்ணில் தென்பட்டார்.வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க தொடங்கினேன்.சிறிது நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க ஆரம்பித்தது.
ஒரு பெண் வர்னையாளரும் ,மனுஷ்ய புத்திரனும் மேடையில் தோன்றினர். பிறகு வந்திருந்த அணைத்து cheif  guest -களும் அந்த பெண்மணியால் அழைக்கப்பட்டு மேடையில் தோன்றினர்.


பின்னர் சாருவின் புத்தகங்களை திரு. நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட சாருவின் அன்பு நண்பர்கள் பெற்று கொண்டனர்.அப்போது தான் தெரிந்தது அவந்திகா அம்மா  தான் வாயிலில் அனைவரையும் அன்பாக வரவேற்று கொண்டிருந்த பெண்மணி என்று.முன்பே தெரிந்திருந்தால் அவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றிருப்பேன் அவரது அன்புள்ளத்திர்காக ( சாருவின் எழுத்து மற்றும் இணையம் மூலம் அவரை பற்றி தெரிந்திருக்கிறேன்).






பின்னர் சாருவின் ஒவ்வொரு புத்தகங்கள் பற்றி ஒவ்வொரு பிரபலங்கள் பேசினர்.தமிழச்சி, மதன் மற்றும் எஸ்ரா அவர்களது பேச்சு மிக அருமை. மற்றவர்கள் பற்றிய விமர்சனம் இங்கு தேவை இல்லை.


பின்னர் முடிவுரைக்காக நம் சாரு மேடையில் தோன்றியதும் கை தட்டல், விசில்கள் பறந்தது. பின்னர் பேசிய சாரு மென்மையாக, அருமையாக பேசி நன்றி தெரிவித்து கொண்டார்.


விழா முடிந்ததும் வெளியில் சாருவை மிக அருகில் கண்டேன்.உண்மையிலேயே சூப்பர் ஹீரோ போல்தான் இருந்தார்.புத்தகங்களை  நீட்டி ஆட்டோகிராப் கேட்டேன்,இப்பொழுது வேண்டாம் புத்தக கண்காட்சிக்கு வாங்க  ஆட்டோகிராப்  தருகிறேன் என்று கூறினார்.மன சங்கடமான சூழ்நிலையில் ஒரு போட்டோ எடுத்து கொள்ளலாம் என்று பையை பார்த்தல்  உள்ள கேமரா இல்லை. மறதியால் மனம் வருந்தினேன்.


அனாலும் ஒரு சந்தோஷம் சாரு என் முதுகில் தட்டி கொடுத்தார்,ஆட்டோகிராப் கேட்டதற்கு.  கண்டிப்பாக இந்த ஏழு புத்தகங்களிலும் ஒரு நாள் ஆட்டோகிராப் வாங்கிவிடுவேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...