Wednesday, 29 June 2011
Tuesday, 28 June 2011
Thursday, 23 June 2011
Wednesday, 22 June 2011
Monday, 20 June 2011
Sunday, 19 June 2011
Friday, 17 June 2011
Thursday, 16 June 2011
Friday, 10 June 2011
Thursday, 9 June 2011
Wednesday, 8 June 2011
Tuesday, 7 June 2011
பதிவுலக நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஓர் அண்பான வேண்டுகோள்
பெட்ரோல் விலையேற்றம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.இதை நம்மால் கட்டுபடுத்த முடியவில்லை. ஊருலகில் எது எதற்கோ போராட்டம் உண்ணாவிரதம் இருக்கும் பலர் பெட்ரோல் விலையேற்றம் குறித்து கவலை படுவது போல் தெரிவதில்லை.
பெட்ரோல் விலை உயர்வது போல் டீஸல் விலை ஏன் உயர்வதில்லை ? டீஸல் விலை ஏற்ற படும் என்று பேச்சு எழுந்தாலே போராட்டம் என்று கோதாவில் இறங்குகின்றனர் இந்தியா முழுவதும் உள்ள லாரி ஒட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர். இதற்காகவே டீஸல் விலை அவ்வளவு சீக்கிரமாக உயர்த்தபடுவதில்லை.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் 17 ரூபாய்க்கும், மலேசியாவில் 18 ரூபாய்க்கும் கிடைக்கும் பெட்ரோல் ஏன் இந்தியாவில் மட்டும் 67 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்க்கு நம் அரசு சொல்லும் காரணம் "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு." ஆனால் காரணம் அதுவல்ல. பெட்ரோல் விலை உயர்வு பெட்ரோலிய நிறுவனம் கைகளிலே தான் இருக்கிறது.
சரி, இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் பெட்ரோலில் தரம் இருக்கிறதா? கொடுக்கும் பணத்திற்கு சரியான அளவு கிடைக்கிறதா? இல்லை.
நண்பர்களே, பெட்ரோல் விலை உயர்வு இதோடு நிற்க போவதில்லை. நாளை, நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, மருந்துகள் போன்றவற்றிற்கும் நாம் அதிக ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும்.
நான் சமிபத்தில் படித்த செய்திகள்:
- பெட்ரோல் விலை உயர்வால் விமான டிக்கெட் விலை ஏற்றப்படும்
- 30 ,௦௦௦ ரூபாய்க்கு கிடைத்த மினசாரத்தில் இயங்கும் வண்டிகள், பெட்ரோல் விலை ஏற்றத்தினால் 50 % மடங்கு விலை உயர வாய்ப்பு உள்ளது.
ஆகவே நண்பர்களே, நாம் போராட்டமோ அல்லது உண்ணாவிரதமோ கடைப்பிடிக்காமல் பெட்ரோல் விலையேற்றத்தை வீழ்ச்சி அடைய வைக்க ஒரு நல்ல வழி உள்ளது.
அதாவது ஒரு நாள், ஒரே ஒரு நாள் நாம் கூட்டாக நம் வாகனங்களுக்கு பெட்ரோல் போடாமல் இருந்தால் ஒவ்வொரு பெட்ரோலிய நிறுவங்களுக்கும் பேரிழப்பு ஏற்படும் (கோடி கணக்கில்) . இது போல் பத்து நாட்களுக்கு ஒரு முறை நாம் கூட்டாக நம் வாகனங்களுக்கு பெட்ரோல் போடாமல் இருந்தால் பெட்ரோல் விலையேற்றத்தை வீழ்ச்சி அடைய வைக்கலாம்.
ஒரு முறை செய்து பார்ப்போமே நண்பர்களே. மின்னஞ்சல் மூலம் பல நண்பர்கள் இந்த புது முயற்சியை பலருக்கு தெரிய படுத்துகிறார்கள். தமிழ் பதிவர்களான நாமும் இதை கடை பிடிப்போமே. ஒரு முறை செய்து பார்ப்போமே நண்பர்களே.
அவ்வாறாக தேர்ந்து எடுக்க பட்ட நாள் ஜூன் 14. இந்நாளில் நாமும் பெட்ரோல் வாங்காமல் இருப்போம் பிறரையும் வலியுறுத்துவோம் நண்பர்களே.
பின் குறிப்பு: நான் பின்தொடரும் பதிவர்கள் அனைவருக்கும் நிறைய வாசகர்கள் உள்ளனர்.அவர்கள் மூலம் இச்செய்தி பரவும் என்ற நம்பிக்கையில் இப்பொழுது விடை பெறுகிறேன்.
Monday, 6 June 2011
Thursday, 2 June 2011
Subscribe to:
Posts (Atom)