Friday 30 September 2011

எல் ஆர் ஈஸ்வரியுடன் டி ராஜேந்தர் பாடிய குத்துப் பாட்டு!

எல் ஆர் ஈஸ்வரி... சினிமாவில் பொன்விவா கொண்டாடும் பாடகி. 60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர். காபரே, தெம்மாங்கு, தாலாட்டு, காதல் என அத்தனை விதமான பாடல்களிலும் வெளுத்துக் கட்டிய எல்ஆர் ஈஸ்வரியின் குரலுக்கு இன்றும் தனி ரசிகர் கூட்டமுண்டு. எண்பதுகளுக்குப் பிறகு எல் ஆர் ஈஸ்வரி சினிமாவில் பாடுவது நின்றுபோனது. பக்திப் பாடல்களைப் பாடி வந்தார்.


இந்த நிலையில், எல் ஆர் ஈஸ்வர் மீண்டும் முழுமையான குத்துப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்தப் பாடலில் அவருடன் சேர்ந்து பாடியிருப்பவர் சினிமாவின் அஷ்டாவதானி எனப்படும் டி ராஜேந்தர். அவரது மகன் சிலம்பரசன் நடிக்கும் ஒஸ்தி படத்தில் இடம்பெறும் குத்துப்பாடலைத்தான் இந்த இருவரும் இணைந்து பாடுகிறார்கள்.

'கலாசலா..' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாட்டுக்கு திரையில் ஆடப் போகிறவர் மல்லிகா ஷெராவத். அவருடன் ஹீரோ சிம்பு, வில்லன் சோனு சூட் ஆகியோரும் குத்தாட்டம் போடுகிறார்கள் இந்தப் பாடலுக்கு.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற தபாங் படத்தின் ரீமேக்தான் இந்த ஒஸ்தி. தபாங்கில் 'முன்னி பத்னம்' என்ற ஐட்டம் பாட்டு செம ஹிட். அந்தப் பாடலுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் தமன் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ள பாடல்தான் 'கலாசலா..'

மல்லிகா ஷெராவத், எல் ஆர் ஈஸ்வரி, டி ராஜேந்தர், சிம்பு என ஒரு வித்தியாசமான கூட்டணி இந்தப் பாடலுக்கு அமைந்துவிட்டதால், இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.


Thursday 29 September 2011

நமது இரத்தம் பற்றி கொஞ்சம் தெரிஞ்சி வச்சிப்போமா?

நம்ம எல்லாருக்கும் தெரியும் மனித இரத்தம் எட்டு வகைப்படும் அவை AB+, AB-, A+, A-, B+, B-, O+ மற்றும் O-.

இவைகளில் நெகடிவ் வகை இரத்தம் மிக அறியவையாகும். வெகு சிலரே நெகடிவ் வகை இரத்தத்திற்கு சொந்தக்காரர்கள். 

இந்திய மக்கட்தொகையளவில் இரத்தத்தின் சதவிதத்தை பாருங்கள். 


**************
அதே போல் அவசர தேவைக்கு பாசிடிவ் ரக இரத்தங்கள் எளிதில் கிடைகின்றன ஆனால் நெகடிவ்  ரக இரத்தங்கள் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. 

http://www.blooddonors.in/ மற்றும் http://www.indianblooddonors.com/  என்ற வலைத்தளங்கள் அவசர நேரங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

சரி, ஒரே வகையை சேர்ந்த இரத்தக்காரர்கள் தான் இரத்த பரிமாற்றம் செய்து கொள்ள முடியுமா? இல்லை கீழே உள்ள அட்டவணையில் பாருங்கள். 

You Can Receive
If Your Type Is
O-
O+
B-
B+
A-
A+
AB-
AB+
AB+
YES
YES
YES
YES
YES
YES
YES
YES
AB-
YES
 
YES
 
YES
YES
 
 
A+
YES
YES
 
 
YES
YES
 
 
A-
YES
 
 
 
YES
 
 
 
B+
YES
YES
YES
YES
 
 
 
 
B-
YES
 
YES
 
 
 
 
 
O+
YES
YES
 
 
 
 
 
 
O-
YES
 
 
 
 
 
 


பாவம் O - இரத்தக்காரர்கள், எல்லா வகையினருக்கும் இவர்கள் இரத்தம் பொருந்தும் ஆனால் இவர்களுக்கு வேறெந்த இரத்தமும் பொருந்தாது.


Wednesday 28 September 2011

ஏ ஆர் முருகதாஸ் வேதனை

உலகமே கொண்டாடும் தமிழ் சாதனையாளர் போதி தர்மனைப் பற்றி உள்ளூர் தமிழர்கள் ஒருவருக்கும் தெரியவில்லையே, என வேதனைப்பட்டார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.


சூர்யா-சுருதிஹாசன் ஜோடியாக நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்துள்ள படம் 7-ஆம் அறிவு. பெரும் பொருட்செலவில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். படம், தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.


இதையொட்டி சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.


இயக்குநர் முருகதாஸ் பேசுகையில், "1,600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த போதி தர்மன் என்ற பல்லவ மன்னர் பரம்பரை இளவரசன், பின்னாளில் உலகம் முழுக்க பயணித்தான். அவனே பின் சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை அங்கே நிறுவினான்.


அங்கே எங்கே பார்த்தாலும் போதிதர்மனுக்கு சிலைகள் உள்ளன. சீனாவின் புகழ்பெற்ற ஷோலின் கோயிலில் தமிழரான போதி தர்மனின் சிலையைப் பார்த்து சிலிர்த்துவிட்டேன்.

சீன மாணவர்கள் போதியை பாடமாகவே படிக்கிறார்கள். புத்த சமயத்தின் குருவாக அவரை மதிக்கிறார்கள். அவர் படைத்த சாதனைகள் கொஞ்சமல்ல. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி அவன் பிறந்த காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.

இனி வரும் தலைமுறையினர் போதி தர்மன் பெயரை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்ட வேண்டும். இவ்வளவு பெரிய சாதனையாளனுக்கு சிலை எழுப்பி அவன் புகழைப் பரப்ப வேண்டும்.

சூர்யா இந்த படத்துக்காக நிறைய நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். நிறைய பேருக்கு அந்த பரந்த மனசு வராது. சுருதிஹாசன், சுபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சுபாவையும், சுருதியையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை," என்றார்.

படத்தின் நாயகன் சூர்யா பேசுகையில், "போதி தர்மனை, பாதி உலகம் கடவுளாக கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் போதி தர்மனை பற்றிய தடயங்களே அழிக்கப்பட்டு விட்டன. அவருடைய புகழ் மறக்கடிக்கப்பட்டு விட்டதால், யாரும் இதுபற்றி படம் எடுக்கவில்லை.

அவரை பற்றிய புத்தகங்களை படித்துவிட்டு, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தூக்கமின்றி தவித்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக, சில தற்காப்பு கலை பற்றிய பயிற்சி பெறுவதற்காக வியட்நாம் சென்றேன். அங்கே 80 வயது பாட்டி, சிலம்பம் சுற்றிக்கொண்டிருந்தார். மிரண்டு போனேன்.

அங்கே சர்க்கரை நோய் மருந்து விற்பதில்லை என்று கேள்விப்பட்டேன். அந்த மருந்து அங்கே தேவைப்படவில்லை.

படத்தில் எனக்கு ஸ்ருதிஹாசன்தான் ஜோடி என்றதும் வெடவெடத்துப் போனேன். அவர், கமல்ஹாசனின் மகள் என்பதால், பதற்றமாக இருந்தது. எனக்கு இணையான கதாபாத்திரம் அவருக்கு.

ஸ்ருதிஹாசனுக்கு தமிழ்ப்பட உலகில் ஒரு முக்கிய இடம் த்துக்கொண்டிருக்கிறது,'' என்றார்.

பேட்டியின்போது, பட அதிபர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

7-ஆம் அறிவு படத்தின் பெரும்பகுதி சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தட்ஸ்தமிழ் 


Tuesday 27 September 2011

உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா மற்றும் ரத்தன் டாடா

உலகின் செல்வாக்குமிக்கவர் பட்டியலில் இந்தியாவின் சோனியா காந்தி, ரத்தன் டாடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

லண்டனில் இருந்து வெளிவரும் நியூஸ்டேட்மேன் பத்திரிகை இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகின் சக்திமிக்க முதல்நிலை மனிதர்கள் 50 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சோனியா காந்தியை மிக்க திறமையான அரசியல்வாதி என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் 'மேடம் காந்தி' என்ற சிறப்புப் பெயரை அவருக்கு வழங்கியுள்ளது இந்தப் பத்திரிகை.


இந்தப் பட்டியலில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடாவும் இடம்பெற்றுள்ளார். உலோகத் தலைவர் என்ற சிறப்புப் பட்டமிட்டு அவரை அப்பட்டியலில் சேர்த்துள்ளது நியூஸ்டேட்மென்.


ஜெர்மனி அதிபர் ஏஞ்சல் மெர்கெல் உலகின் முதல் செல்வாக்கு மிக்கவராக பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பாகிஸ்தான் ராணுவ தலைவர் அஷ்பாக் கியானிக்கும் இந்தப் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.


உலகப்போரில் பயன் படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பீரங்கிகள்

Saturday 24 September 2011

சாம்பியன்ஸ் லீக் 2011 கோப்பையை வெல்ல போவது யார்?


பெரிதும் எதிர்பார்க்க பட்ட சாம்பியன்ஸ் லீக் 2011 போட்டி தொடங்கிவிட்டது .

சாம்பியன்ஸ் லீக் 2011 கோப்பையை வெல்ல போவது யார்? இந்தியாவை சேர்ந்த 4  அணிகளில்  ஒன்றா அல்லது 4  வெளிநாட்டு அணிகளில் ஒன்றா. நேற்று நடந்த வாரியர்ஸ் Vs  பெங்களூர் ராயல் சாலேன்ஜெர்ஸ் போட்டியில் வாரியர்ஸ் அணி முதல் வெற்றியை ருசித்தது. 


அதெல்லாம் இருக்கட்டும் சாம்பியன்ஸ் லீக் 2011 கோப்பையை நடப்பு சாம்பியன்சான  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெல்லுமா? நம் எதிர்பார்ப்பும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெல்லவேண்டும் என்பதே.
உங்களது கருத்தை பக்கத்தில் உள்ள ஓட்டு பெட்டியில் பதிவிட்டு செல்லுங்கள். Thursday 22 September 2011

பெரிய படிப்பு படிச்சவங்க

சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. படத்தை பார்த்தால் உங்களுக்கே  புரியும். 


உபயம்: FACEBOOK நண்பர் 


Wednesday 21 September 2011

கொஞ்சம் சிரிக்கலாமே ...


என்ன அழகு!! எத்தனை அழகு !! கோடி மயிர்கள் கொட்டிய அழகு!!

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான்!!   

கோல் போஸ்ட்க்கு பதில் இவர நிக்க வச்சிடலாம்.

நம்மூர்ல கூட இந்த சட்டத்த சீக்கரம் அமுல் படுத்த போறாங்களாம்.

பச்சரிசி பல்லழகா பால் சிரிப்பில் கொள்ளாதே !

கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா, கண்டப்படி கட்டிப்பிடிடா!

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் வேண்டும். 

ஓரம் போ, ஓரம் போ ருக்குமணி வண்டி வருது. 

இவர் எப்ப ரெப்ரீ ஆனார் ? 


Tuesday 20 September 2011

ரா ஒன்னை இந்தியாவின் பரபரப்புக்குரிய படமாக்கிய ரஜினி

'ஒரே நிமிடம்... ஜஸ்ட் ஒரே காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கப் போகிறார்' - இந்த ஒரு செய்தி இத்தனை நாளும் தென்னிந்திய மக்களால் பெரிதாக பேசப்படாமல் இருந்த ஷாரூக்கானின் ரா ஒன் படத்தை, தலைப்புச் செய்திகளில் இடம்பெறச் செய்துவிட்டது.இதுவரை இந்தப் படத்தை ரஜினியின் ரோபோ காப்பி என்று பேசி வந்த வட இந்திய ரசிகர்களோ, ரஜினியே நடிக்கிறார் என்று தெரிய வந்ததும் மிக ஆவலுடன் அந்த செய்தி உண்மையாகும் தருணத்துக்காக காத்திருக்கின்றனர்.

வட இந்திய செய்தித் தாள்கள் மற்றும் இணையதளங்கள் இப்படித்தான் தொடர்ந்து சில தினங்களாக எழுதிவருகின்றன....ரா ஒன் படத்தை நம்பர் ஒன்னாக்கிவிட்டார் ரஜினி' என குறிப்பிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ். 'ரா ஒன்னை ரெட் ஒன்னாக்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்' என புகழாரம் சூட்டியுள்ளார் பிரபல சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை. வட இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் படத்தில் ரஜினி நடித்தால், ரோபோவின் காப்பி என்ற இமேஜ் நிச்சயமாக மாறிவிடும் என்கிறார் பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ்.

சரி... இது சாத்தியம்தானா...ரஜினி உண்மையில் நடிக்கப் போகிறாரா ரா ஒன்னில்?

இந்தக் கேள்விதான் பெரும்பாலான ரசிகர்கள் மனதில்.

ரா ஒன் படத்தின் தயாரிப்பாளர் ஈராஸ் இன்டர்நேஷனல். இவர்கள்தான் ரஜினியின் ராணா படத்தை சௌந்தர்யாவுடன் இணைந்து தயாரிக்கிறார்கள். ஷாரூக்கான் ஏற்கெனவே ரஜினியிடம் 'இந்தக் காட்சியில் நடித்துத் தந்தால், படத்துக்கே அது ஒரு பெரிய கவுரவமாக இருக்கும்' என கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு ரஜினி என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.

ஈராஸ் நிறுவனத்தினரும் இதை தங்கள் விருப்பமாக தெரிவித்துள்ளனர். ஷாரூக்கானுக்காக இல்லாவிட்டாலும், ராணா தயாரிப்பாளர்கள் நலன் கருதியாவது ரஜினி இதைச் செய்யக்கூடும் என்பதுதான் திரையுலகில் பேச்சாக இருக்கிறது.

மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ள ரஜினி, பூரண ஒய்வுக்குப் பிறகு கேமராவுக்கு முன் நிற்கும்போது, அந்த அதி உயர்மின் வெளிச்சம் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும் இந்த ஒரு நாள் ஷூட் பயன்படும் என்று திரையுலகினர் சிலர் தெரிவித்தனர்.

இன்னொரு பக்கம், விநியோகஸ்தர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர், ரஜினி நடிக்கிறாரா இல்லையா என்பதைப் பார்த்த பிறகு இந்தப் படத்தை வாங்க. ரஜினி நடித்தால் தென்னிந்திய உரிமை பெரும் விலைக்குப் போகும் என்பதால், படத்தை நேரடியாக ஈராஸின் துணை நிறுவனமான அய்ங்கரனே ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளது.

இவை எல்லாமே ரஜினி சொல்லப்போகும் ஒற்றை வார்த்தை பதிலைப் பொறுத்து இருக்கிறது!


Saturday 17 September 2011

மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்


மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் மீது நடிகை சோனா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து சோனா நிருபர்களிடம் கூறுகையில், "மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித்திருந்த வைபவ் வீட்டில் நேற்று (நேற்று முன்தினம்) இரவு, 'பார்ட்டி' நடந்தது. அதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, அரவிந்த், அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் உள்பட 'மங்காத்தா' படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரணும் அந்த 'பார்ட்டி'க்கு வந்திருந்தார். வெங்கட்பிரபு என் நண்பர் என்பதால், என்னையும் அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்று நானும் 'பார்ட்டி'யில் கலந்துகொண்டேன்.

அங்கு மது விருந்து நடந்தது. திடீரென்று எஸ்.பி.சரண் என் மீது பாய்ந்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் வெட்கத்தாலும், அதிர்ச்சியாலும் கூனிக் குறுகி போய்விட்டேன். என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

நான் ஒரு கவர்ச்சி நடிகைதான். பிழைப்புக்காக நான் கவர்ச்சியாக நடிக்கிறேன். ஆனால், நான் விலை மாது அல்ல. ஏற்கனவே ஒருமுறை, எஸ்.பி.சரண் என்னிடம் தவறாக பேசினார். அதில் இருந்து நான் அவருடன் பேசுவதில்லை.

இதுபற்றி நான் பாண்டிபஜார் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறேன். போலீஸ் என்ன நடவடிக்கை எடுப்பார்களோ, எடுக்கட்டும். அதோடு எஸ்.பி.சரண் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இன்னும் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார்’’ என்று கூறியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக சோனா நேற்று இரவு பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுவை சந்தித்து புகார் கொடுத்தார்.


எஸ்பிபி சரண் பதில்

நடிகை சோனாவின் பாலியல் புகார் குறித்து எஸ்.பி.சரண் கூறுகையில், "வைபவ் வீட்டில் மது விருந்து நடந்தது உண்மை. ஆனால், சோனா சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. நான், சோனாவிடம் 'பிஸினஸ்' பற்றிதான் பேசினேன்.
Tuesday 13 September 2011

கூகிள் க்ரோம் ப்ரௌசெரில் ஒரு வலைதளத்தின் Alexa ராங்கை எளிதில் கண்டறிய

கூகிள் க்ரோம் ப்ரௌசெரில் ஒரு வலைதளத்தின் Alexa ராங்கை எளிதில் கண்டறிய......மேல உள்ள சுட்டியை கிளிக் செய்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு இணைய பக்கம் திறக்கும். 

Tuesday 6 September 2011

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ. 2 கோடி பரிசு - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் தன் சொத்து மதிப்பு 51 கோடி என்று தடாலடியாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, மேலும் ஒரு தடாலடி அறிவிப்பு செய்துள்ளார். 


மும்பையை கலக்கிய இரு வாலிபர்கள்


சமீபத்திய  செய்திகளில் இரு வாலிபர்கள் மும்பை லோக்கல் ரயிலில் செய்யும் அட்டகாசத்தை கண்டு இருப்பீர்கள். அவற்றின் முழு காணொளி தொகுப்பு இங்கே உங்கள் பார்வைக்கு. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...