உலகின் செல்வாக்குமிக்கவர் பட்டியலில் இந்தியாவின் சோனியா காந்தி, ரத்தன் டாடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லண்டனில் இருந்து வெளிவரும் நியூஸ்டேட்மேன் பத்திரிகை இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகின் சக்திமிக்க முதல்நிலை மனிதர்கள் 50 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சோனியா காந்தியை மிக்க திறமையான அரசியல்வாதி என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் 'மேடம் காந்தி' என்ற சிறப்புப் பெயரை அவருக்கு வழங்கியுள்ளது இந்தப் பத்திரிகை.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடாவும் இடம்பெற்றுள்ளார். உலோகத் தலைவர் என்ற சிறப்புப் பட்டமிட்டு அவரை அப்பட்டியலில் சேர்த்துள்ளது நியூஸ்டேட்மென்.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சல் மெர்கெல் உலகின் முதல் செல்வாக்கு மிக்கவராக பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பாகிஸ்தான் ராணுவ தலைவர் அஷ்பாக் கியானிக்கும் இந்தப் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தியை மிக்க திறமையான அரசியல்வாதி என்று குறிப்பிட்டுள்ளனர்.// என்ன கொடுமை சரவணன்
ReplyDeleteபாகிஸ்தான் ரானுவதளபதியும் இருக்கிறாரா ?????? அப்பா சோனியா இருக்கலாம் தானே
ReplyDeleteநல்ல தகவல் நண்பா.ஆனால் சோனியாவை திறமையான அரசியல்வாதி என்று ஏன் குறிப்பிட்டுள்ளனர் என்று தான் தெரியவில்லை
ReplyDelete//கந்தசாமி. said...
ReplyDeleteசோனியா காந்தியை மிக்க திறமையான அரசியல்வாதி என்று குறிப்பிட்டுள்ளனர்.// என்ன கொடுமை சரவணன்//
நான் சரவணன் இல்லைங்க
//A.சிவசங்கர் said...
ReplyDeleteபாகிஸ்தான் ரானுவதளபதியும் இருக்கிறாரா ?????? அப்பா சோனியா இருக்கலாம் தானே//
பாவம் இருந்துட்டு போட்டும்.
//வைரை சதிஷ் said...
ReplyDeleteநல்ல தகவல் நண்பா.ஆனால் சோனியாவை திறமையான அரசியல்வாதி என்று ஏன் குறிப்பிட்டுள்ளனர் என்று தான் தெரியவில்லை//
விடுங்க விடுங்க எல்லாத்தையும் சகிச்சிட்டு தான் போனும்.