Tuesday 6 September, 2011

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ. 2 கோடி பரிசு - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் தன் சொத்து மதிப்பு 51 கோடி என்று தடாலடியாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, மேலும் ஒரு தடாலடி அறிவிப்பு செய்துள்ளார். 


 அதாவது,  ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ. 2 கோடி பரிசளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி தங்கப் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு இனிமேல் ரூ. 2 கோடி பரிசுத்தொகை தரப்படும். வெள்ளி வெல்வோருக்கு ரூ. 1 கோடியும், வெண்கலம் வெல்வோருக்கு ரூ. 50 லட்சமும் பரிசாக தரப்படும்.

அதேபோல காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கான பரிசுத் தொகையும் உயர்த்தப்படுகிறது.

சென்னையில் உலகத் தரத்திலான ரூ. 1 கோடி மதிப்பில் விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும். இங்கு ஆண்டு தோறும் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். 10 முதல் 16 வயது வரையிலானவர்கள் இதில் சேர்க்கப்படுவர். இவர்கள் சென்னையில் எந்தக்கல்வி நிறுவனத்தில் படிக்க விரும்பினாலும் அங்கு சேர்க்கப்படுவர் என்றார் ஜெயலலிதா.

6 comments:

  1. ..//சென்னையில் உலகத் தரத்திலான ரூ. 1 கோடி மதிப்பில் விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும். இங்கு ஆண்டு தோறும் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்//..

    இந்த மாதிரி வசனம் நெறையவே கேட்டாச்சு..

    ReplyDelete
  2. Good post . . Try to write lot of posts

    ReplyDelete
  3. //கோவி said...இந்த மாதிரி வசனம் நெறையவே கேட்டாச்சு..//

    என்ன பண்றது சார்...இந்த தடவையும் கேட்டு தான் ஆகணும்.

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...