கந்தசாமி டீ கடையில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருக்க, அவரை நோக்கி வருகிறான் கோபால் கையில் இரண்டு புத்தகங்களுடன்.
கோபால்: என்ன சித்தப்பு, ரொம்ப பிஸியா.
கந்தசாமி: வாடா என் அண்ணன் மவனே. எங்க இந்த பக்கம்?
கோபால்: கம்ப்யூட்டர் கிளாஸ் முடிச்சிட்டு வரேன் சித்தப்பு. நா என்ன உன்ன மாதிரியா.......VRS வாங்கிட்டு, கலேல தின தந்தி சாயங்காலம் மாலை மலர்னு உக்காரதக்கு.
கந்தசாமி: அட போடா என்ன மாதிரி உக்காந்து பாத்த தான தெரியும். சரி உக்காரு டீ சாப்டலாம். சண்முகம் கோபாலுக்கு லைட்டா ஒரு டீ போடுப்பா.
(டீ வர கச்சேரி தொடங்குகிறது)