Monday 28 February, 2011

Mr. VRS கந்தசாமி

கந்தசாமி டீ கடையில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருக்க, அவரை நோக்கி வருகிறான் கோபால்  கையில் இரண்டு புத்தகங்களுடன்.

கோபால்: என்ன சித்தப்பு, ரொம்ப பிஸியா.

கந்தசாமி: வாடா என் அண்ணன் மவனே. எங்க இந்த பக்கம்?

கோபால்:  கம்ப்யூட்டர் கிளாஸ் முடிச்சிட்டு வரேன் சித்தப்பு. நா என்ன உன்ன மாதிரியா.......VRS வாங்கிட்டு, கலேல தின தந்தி சாயங்காலம் மாலை மலர்னு உக்காரதக்கு.

கந்தசாமி: அட போடா என்ன மாதிரி உக்காந்து பாத்த தான தெரியும். சரி உக்காரு டீ சாப்டலாம். சண்முகம் கோபாலுக்கு லைட்டா ஒரு டீ போடுப்பா.

(டீ வர கச்சேரி தொடங்குகிறது)

கோபால்: சித்தப்பு , பேப்பர்ல  பாத்தியா, பச்சையப்பாஸ் பசங்க  பண்ற அட்டுழியத்த. 

கந்தசாமி: என்னடா அந்த பஸ் டே மேட்டர் தான?

கோபால்: அதுக்கு அப்பறம்  எவளவோ  நடந்து இருக்கு சித்தப்பு, தெரியாத உனக்கு?

கந்தசாமி: சரி விசயத்த மொத சொல்லு.

கோபால்: அது  சித்தப்பு, நம்ம போலீஸ்காரங்களும் பச்சையப்பாஸ் பசங்களும் ............

கந்தசாமி: ஒ  அந்த மேட்டரா...தெரியும்டா பேப்பர்ல படிச்சேன்.

கோபால்: தெரியுமா உங்களுக்கு  ?

கந்தசாமி: தெரியும்டா. எப்ப நம்ம பிலாசபி அவனுங்க மேல காண்டு அனாரோ, அன்னைக்கே அவனுங்களுக்கு அனத்தம் பிடிச்சிருச்சு. அநியாயம் பன்றானுங்கடா பய புள்ளைங்க.

 கோபால்: ஓ! நம்ம பிரபா ஒயின் ஷாப் ஒனர சொல்றீங்களா?

கந்தசாமி: ஆமாட, சரி நேத்து மேட்ச் பாத்தியா?

கோபால்: போங்க சித்தப்பு , நம்ம பசங்க ஏமாத்திட்டாங்க. ஜெய்க வேண்டிய மாட்ச டைல முடிச்சுட்டாங்க.

கந்தசாமி: எனக்கு அப்பவே தெரியும்டா. நம்ம இட்லிவடை புகழ்  பெருங்குளம்    ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்  ரெண்டு  டீமுக்கும்  வெற்றி  வாய்ப்பு   இருக்குனு  சொன்னாரு. தோல்வி  பத்தி  பேசவே இல்ல. அதன் டைல முடிஞ்சிடுச்சு.

 கோபால்: என்னமோ சித்தப்பு பசங்க கப்போட வந்தா சந்தோஷம். சரி  நா கெளம்புறேன் எங்க அம்மா தேடும். பாய்  சித்தப்பு.

கந்தசாமி: கெளம்புடா மவனே, நானும் பொய் உன் சித்தி கையால திரிகடுக பொடி கசாயம் சாப்டனும்.பத்தரமா போ.





1 comment:

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...