Tuesday 7 June, 2011

பதிவுலக நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஓர் அண்பான வேண்டுகோள்

பெட்ரோல் விலையேற்றம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.இதை நம்மால் கட்டுபடுத்த முடியவில்லை. ஊருலகில் எது எதற்கோ போராட்டம் உண்ணாவிரதம் இருக்கும் பலர் பெட்ரோல் விலையேற்றம் குறித்து கவலை படுவது போல் தெரிவதில்லை. 


பெட்ரோல் விலை உயர்வது போல் டீஸல் விலை ஏன் உயர்வதில்லை ? டீஸல் விலை ஏற்ற படும் என்று பேச்சு எழுந்தாலே போராட்டம் என்று கோதாவில் இறங்குகின்றனர் இந்தியா முழுவதும் உள்ள லாரி ஒட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர். இதற்காகவே டீஸல் விலை அவ்வளவு சீக்கிரமாக உயர்த்தபடுவதில்லை. 

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் 17 ரூபாய்க்கும், மலேசியாவில் 18 ரூபாய்க்கும் கிடைக்கும் பெட்ரோல் ஏன் இந்தியாவில் மட்டும் 67 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்க்கு நம் அரசு சொல்லும் காரணம் "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு." ஆனால் காரணம் அதுவல்ல. பெட்ரோல் விலை உயர்வு பெட்ரோலிய நிறுவனம் கைகளிலே தான் இருக்கிறது.



சரி, இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் பெட்ரோலில் தரம் இருக்கிறதா? கொடுக்கும் பணத்திற்கு சரியான அளவு கிடைக்கிறதா? இல்லை. 

நண்பர்களே, பெட்ரோல் விலை உயர்வு இதோடு நிற்க போவதில்லை. நாளை, நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, மருந்துகள் போன்றவற்றிற்கும் நாம் அதிக ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும்.

நான் சமிபத்தில் படித்த செய்திகள்:

  1. பெட்ரோல் விலை உயர்வால் விமான டிக்கெட் விலை ஏற்றப்படும்
  2. 30 ,௦௦௦ ரூபாய்க்கு கிடைத்த மினசாரத்தில் இயங்கும் வண்டிகள், பெட்ரோல் விலை ஏற்றத்தினால் 50 % மடங்கு விலை உயர வாய்ப்பு உள்ளது.
ஆகவே நண்பர்களே, நாம் போராட்டமோ அல்லது உண்ணாவிரதமோ கடைப்பிடிக்காமல் பெட்ரோல் விலையேற்றத்தை வீழ்ச்சி அடைய வைக்க ஒரு நல்ல வழி உள்ளது. 

அதாவது ஒரு நாள், ஒரே ஒரு நாள் நாம் கூட்டாக நம் வாகனங்களுக்கு பெட்ரோல் போடாமல் இருந்தால் ஒவ்வொரு பெட்ரோலிய நிறுவங்களுக்கும் பேரிழப்பு ஏற்படும் (கோடி கணக்கில்) . இது போல் பத்து நாட்களுக்கு ஒரு முறை நாம் கூட்டாக நம் வாகனங்களுக்கு பெட்ரோல் போடாமல் இருந்தால் பெட்ரோல் விலையேற்றத்தை வீழ்ச்சி அடைய வைக்கலாம்.

ஒரு முறை செய்து பார்ப்போமே நண்பர்களே. மின்னஞ்சல் மூலம் பல நண்பர்கள் இந்த புது முயற்சியை பலருக்கு தெரிய படுத்துகிறார்கள். தமிழ் பதிவர்களான நாமும் இதை கடை பிடிப்போமே. ஒரு முறை செய்து பார்ப்போமே நண்பர்களே.

அவ்வாறாக தேர்ந்து எடுக்க பட்ட நாள் ஜூன் 14. இந்நாளில் நாமும் பெட்ரோல் வாங்காமல் இருப்போம் பிறரையும் வலியுறுத்துவோம் நண்பர்களே. 



பின் குறிப்பு: நான் பின்தொடரும் பதிவர்கள் அனைவருக்கும் நிறைய வாசகர்கள் உள்ளனர்.அவர்கள் மூலம் இச்செய்தி பரவும் என்ற நம்பிக்கையில் இப்பொழுது விடை பெறுகிறேன்.
  


14 comments:

  1. கண்டிப்பாக பரவவேண்டிய செய்திதான்...

    ReplyDelete
  2. // # கவிதை வீதி # சௌந்தர் said...
    கண்டிப்பாக பரவவேண்டிய செய்திதான்...//

    தயவுசெய்து பரவ செய்யுங்கள் நண்பரே.

    ReplyDelete
  3. புதிய முயற்சியாக இருக்கிறதே..
    சமூக மாற்றத்துக்கு இது போன்ற முயற்சிகளும் தேவைதான்..

    ReplyDelete
  4. நமக்கு இருசக்கர வாகனங்களும் அலைபேசியும் இருகண்களாகிவிட்ட நிலையில் இது எப்படி சாத்தியமாகும் ???

    என்பது தான் சிந்திக்கத்தக்கதாக இருக்கிறது நண்பா.

    ReplyDelete
  5. இருந்தாலும் முயற்சித்துப்பார்க்கலாம் நண்பா.

    ReplyDelete
  6. சமூக மாற்றத்தின் மீது விருப்பம் கொண்ட ஒவ்வொருவரின் எழுத்துக்களையும் நான் விரும்புவேன்.

    ReplyDelete
  7. //முனைவர்.இரா.குணசீலன் said...
    இருந்தாலும் முயற்சித்துப்பார்க்கலாம் நண்பா.//

    நம்மால் முடியும் சார்.

    //சமூக மாற்றத்தின் மீது விருப்பம் கொண்ட ஒவ்வொருவரின் எழுத்துக்களையும் நான் விரும்புவேன்.//

    தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. //சௌந்தர் said...இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..!!!//


    தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. அவ்வாறாக தேர்ந்து எடுக்க பட்ட நாள் ஜூன் 14. இந்நாளில் நாமும் பெட்ரோல் வாங்காமல் இருப்போம் பிறரையும் வலியுறுத்துவோம் நண்பர்களே. ////

    இதே போல் பிப்ரவரி 14 ம் தேதி பெட்ரோல் போடாமல் இருப்போம் என்று ஒரு போராட்டம் வந்தது அதையாரும் செவி கொடுக்க வில்லை. நம் மக்களுக்கு பெட்ரோல் விலையும் குறைய வேண்டும் ஆனால் போராட்டம் மட்டும் செய்ய கூடாது ... அதனால் தான் இப்படி பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே போகிறது...!!!!


    இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..!!!

    ReplyDelete
  11. Goods thing. . I will share this post to my facebook profile

    ReplyDelete
  12. இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
    இனி தொடர்ந்து வருவேன்..

    ReplyDelete
  13. @வேடந்தாங்கல் - கரு,"என் ராஜபாட்டை"- ராஜா, THOPPITHOPPI

    My dear friends,Thanks for your valuable support.

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...