சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள Mother Theresa Women's Copmlex - இல் மாவட்ட அளவில் உள்ள சுய உதவி குழுவினரின் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி நடை பெறுகிறது.
இந்த மாதம் 28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மகளிர் மேளா 2012 கண்காட்சிக்கு நேற்று என் மனைவியுடன் சென்றிருந்தேன்.
இந்த மாதம் 28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மகளிர் மேளா 2012 கண்காட்சிக்கு நேற்று என் மனைவியுடன் சென்றிருந்தேன்.
இந்த மேளாவில் அணைத்து மாவட்ட சுய உதவி குழுவினர்கள் சுழற்சி முறையில் தங்கள் பொருட்களை விற்பனைக்கும் கண்காட்சிக்கும் கொண்டு வந்து இருகின்றனர்.
அதாவது, இந்த மேளாவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று ஸ்டால்கள் ஒதுக்கப்படும்.அந்த ஸ்டால்களை ஒவ்வொரு குழுவினரும் சுழற்சி முறையில் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
கைவினை பொருட்கள், ஐம்பொன் நகைகள், புடவை, முத்து நகைகள், பொம்மைகள், பருப்பு பொடி மற்றும் ஊறுகாய் வகைகள், நைட்டி , டாப்ஸ், பெல்ட், தொப்பி, பர்ஸ் என்று கண்காட்சி பொருட்களை அடுக்கி கொண்டே போகலாம்.
சிறப்பு பிரிவாக தமிழக உணவு வகைகளுக்கென்றே சிறப்பு ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு ஸ்பெஷல்.
நேற்றைய ஸ்பெஷல் - ஆட்டுக்கால் சூப், இட்லி,இடியாப்பம், பாயா, ஆடை, களி, கூழ், பிட்டு, போளி மற்றும் பல. ஒவ்வொன்றும் டிவைன்.
இந்த மாதிரி மேளாவிற்கு உங்கள் வீட்டு பெண்களை அழைத்து சென்று மகிழுங்கள் நண்பர்களே.
No comments:
Post a Comment
என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.