Thursday 15 December, 2011

முதலாம் ஆண்டில் நீ நான் உலகம்

இன்றோடு நீ நான் உலகம், பதிவுலகில் 1 வருடம் கடந்து விட்டது. 


*************************************

கல்லூரியில் படிக்கும் காலத்தில் Larry Page என்ற மாணவன் விளையாட்டாய் செயல் படுத்திய ஒரு Project பின்னாளில் உலகம் போற்றிய கூகிள் ஆனது. 

இவ்விசயத்தை கேள்விப்பட்ட நான், நானும் இது மாதிரி எதாவது ஒரு வெப்சைட் உருவாக்கி பெரியாள் ஆகணும்னு ஆசை பட்டேன். 

சரியாக நாலரை வருசத்துக்கு முன், அதாவது கல்லூரி விட்டு வெளிய வந்து வேலையில் சேர்ந்த பின் www.cabanova.com என்னும் தளத்தின் மூலம் எனது முதல் வெப்சைட் ஒன்றை உருவாக்கினேன். அதில் என் சுயசரிதை, லொட்டு லொசுக்கு எல்லாம் பதிவு செய்து வைத்தேன். அந்த தளத்தை என்னை தவிர இது வரை யாரும் பார்த்ததில்லை. அதோடு அந்த கடையை சாத்தி விட்டேன்.

பின்பு Google Pages புழக்கத்தில் வந்தது. அதனுள் காலடி எடுத்து வைத்து எதோ நாலு பேருக்கு பயன் படுவது போல் சில சில பக்கங்களை அமைத்தேன்.  சுயசரிதை ஒரு பக்கத்தில், Yahoo Mail & Gmail Login ஒரு பக்கத்தில், சில விளையாட்டுக்கள் ஒரு பக்கத்தில், சாட்டிங் டூல் ஒரு பக்கத்தில் என்று போய் கொண்டிருந்தது (எல்லாம் Widget தாங்க). கொஞ்ச நாளுல அந்த கடையையும் மூடியாச்சு.

அப்பறம் வேலையில் பிஸி ஆகி வெப்சைட் பத்தி யோசிக்க முடியாம போச்சு.

2010 -ல கொஞ்சம் ப்ரீ ஆகி பிளாக்கர் பத்தி கேள்வி பட்டு ஒரு ஆங்கில ப்ளாக் ஒன்னு தொடங்கி அதற்க்கு http://reaching2020.blogspot.com/ னு பெயரும் வச்சு மூணு பதிவு போட்டேன். அப்பல்லாம் தமிழ் Blogger-கள் திரட்டிகள் பத்திலாம் எதுவும் தெரியாது. ஒன்னும் பிக் அப் ஆகாதனால அந்த கடையையும் மூடியாச்சு..

இது வரைக்கும் ஆரம்பித்த எல்லா கடைகளும் மூடப்பட்டதற்கு முக்கிய காரணம் என்னன்னா என்னை தவிர யாரும் அந்த கடைக்கு வருவது இல்லை.

**********************************

பின்னர் எழுத்தாளர் சாருவின் வலைதளத்தின் மூலம் சில தமிழ் பதிவர்களை பற்றி தெரிந்து கொண்டு, நமக்கு சரியான இடம் கிடைத்ததடா சாமீ என்று என் நண்பனின்  அறிவுரையோடு (http://vennilapakkangal.blogspot.com/அவனி அரவிந்தன்) நீ நான் உலகம் ஆரம்பிக்கப்பட்டது.

சாருவின் புத்தக வெளியீடு விழாவில் ஆரம்பித்து அப்டி இப்டினு ஒரு மாசம் ஓட்ட ஆரம்பித்தேன். பின்னர் என் பதிவுலக குரு Philosophy Prabhakaran (அவருக்கு என்னை யாருனே தெரியாது, ஏதோ ஒரு நாள் நம்ம கடைக்கு பக்கம் வந்து போனவர்) அவரது தளத்தை பார்த்து படித்து பிரித்து மேய்ந்து நீ நான் உலகத்திற்கு பட்டி டிங்கரிங் பார்த்து ஓட விட்டேன்.  இப்ப வண்டி நல்லா ஓடிட்டு இருக்கு. 

**********************************

பதிவுன்ற பேர்ல நிறைய படப்பதிவுகள் போட்டிருக்கேன் அதன் மூலம் நிறைய பேருக்கு என்ன தெரிஞ்சுது. இது வரைக்கும் 48 நண்பர்கள் என்னை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதுவரை 100க்கு மேல பதிவு போட்டாச்சு.

**********************************

போதும்டா சாமி உன் புராணம் என்பவர்களுக்கும், என் பதிவை தொடர்பவர்க்கும், தொடராமல் எல்லா பதிவையும் படிப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், என்னை அறியாதவர்களுக்கும் ஒன்னே ஒன்னு சொல்லிட்டு போயிடுறேன்.



 **********************************



4 comments:

  1. Congratulations on ur blog's 1st year anniversary.
    Keep up your good work.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் .. கலக்குங்கள்

    ReplyDelete
  3. நன்றி நன்றி நன்றி ...Thanks to each and everyone for your special wishes..

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...