நண்பர்களே வணக்கம்,
https://drive.google.com/start என்னும் தளத்தில் பதிவு செய்த பலருக்கு கூகிள் டிரைவ் வசதி செயல்படுத்தப்பட்டது.
வசதி கிடைத்தவர்களுக்கு கூகிள் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துகிறது.
Take me to Google Drive - என்னும் சுட்டியை சுட்டி Google Drive -ன் முகப்பு பக்கத்திற்கு சென்று டவுன்லோட் கூகிள் டிரைவ் சுட்டியை சுட்டி Googledrivesync.exe- யை என்னும் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும்.
இவ்வாறு இன்ஸ்டால் செய்த பின் உங்கள் கணினியில் ஒரு போல்டெர் Google Drive என்னும் பெயரில் திறக்கப்படும். இதில் நமக்கு தேவையான கோப்புக்கள், படங்கள், மற்றும் போல்டெர்களை சேமித்து வைத்தால் இணைய இணைப்பு உள்ள போது கூகிள் டிரைவ் உடன் sync ஆகி இணையத்தில் சேமிக்கப்படும். இது சொந்தமாக கணினி வைத்து இருப்பவர்களுக்கு மிக உபயோகமான ஒன்று. இதனால் நீங்கள் உங்கள் சொந்த கணினியை விட்டு வேறு இடத்தில் உள்ள போது https://drive.google.com/ தளத்தின் மூலம் கூகிள் டிரைவில் சேமிக்க பட்டுள்ள கோப்புகளை பார்த்து கொள்ளலாம், தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளலாம்.
சொந்தமாக கணினி இல்லாதவர்கள் https://drive.google.com/ மூலம் நமக்கு தேவையான கோப்புக்கள், படங்கள், மற்றும் போல்டெர்களை சேமித்து வைத்துகொள்ளலாம், தேவையான நேரத்தில் பயன் படுத்தி கொள்ளலாம்.
அங்குள்ள Create பட்டனை கிளிக் செய்து தேவையான கூகிள் டாக்சை உருவாக்கி கொள்ளலாம் அல்லது நீங்கள் உபயோகப்படுத்தும் கணினியில் உள்ள கோப்புகளை அப்லோட் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு நாம் கூகிள் டிரைவில் 5gb வரை பயன்படுத்தலாம்.
மேலும் கூகிள் டிரைவின் பல வசதிகளை அடுத்த பதிவில் காணலாம்.
தகவலுக்கு நன்றி
ReplyDeleteThanks for coming Raja.
Deleteபயனுள்ள தகவல் ! நன்றி நண்பரே !
ReplyDeleteநன்றி நண்பரே.
DeleteSwetha Aunty
ReplyDeleteGood one. thanks
Swetha Aunty