நண்பர்களே நான் முன்னர் கேட்ட கேள்விகளுக்கு சாரு பதில் அளித்து உள்ளார்.
பதில்கள் அமர்க்களம். என்னால் கார்த்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டராம் சாரு.
பதில் தருகிறாரா அல்லது வாரி விடுகிறாரா என்றே தெரியவில்லை. நீங்கள் தான் சொல்லவேண்டும்.
பதில்கள் கீழே.
2.நீங்கள் தானே தினமலரில் எழுதும் அந்துமணி?
அருண் குமார்
பதில்:
ஆம்; நானேதான். அந்துமணி என்ற பெயரில் மட்டும் அல்ல; பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன், புஷ்பா தங்கதுரை, ராஜேஷ் குமார், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் போன்ற பெயர்களில் எழுதுபவனும் நானே. ஞாநி என்ற பெயரில் கல்கியில் இப்போது அரசியல் கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழில் மட்டும் அல்ல; துருக்கியிலும் ஓரான் பாமுக் என்ற பெயரில் எழுதி வருகிறேன். சந்தேகம் இருந்தால் கீதையின் இந்த ஸ்லோகங்களைப் பார்த்துக் கொள்ளவும்.
ஸ்ரீபகவான் கூறுகிறார்: “பார்த்த! இப்பொழுது நீ என்னுடைய நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் பற்பல விதங்களாகவும் பல நிறங்களும் பல உருவங்களும் கொண்டவையாகவும் உள்ள தெய்வீகமான உருவங்களைப் பார்.
(அத்தியாயம் 11, ஸ்லோகம் 5)
20.12.2010.
11.24 a.m.
