Showing posts with label அணுபவம். Show all posts
Showing posts with label அணுபவம். Show all posts

Tuesday, 1 November 2011

நூறு


வணக்கம் நண்பர்களே , இது நீ நான் உலகத்தோட நூறாவது பதிவு. 


சதம் போட்ட கர்வம்லாம் இல்லைங்க, ஏதோ எனக்கு  தெரிஞ்சது, பார்த்தது, கேட்டது, படிச்சத உங்களோட பகிர்ந்திட்டு வரேன். 

நீ நான் உலகம் மூலம் எனக்கு கிடைத்தது என்னனு பார்த்தா ஒரே ஒரு விஷயம் தாங்க, அதாங்க  "நண்பர்கள்"..... முகம் தெரியாத நண்பர்கள், சற்று தாமதத்துடன் அறிமுகமாகிய (முகம் பாத்து) நண்பர்கள். சாட்டிங் நண்பர்கள், இப்படி பல வகை நண்பர்கள் கிடைத்தார்கள்.  

எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க.

நன்றி

நன்றி 

நன்றி 

*****************

எழுத்தாளர் எஸ். ரா பட்டியலிட்ட நூறு சிறந்த நாவல்கள்.



1) பிரதாப முதலியார் சரித்திரம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2) கமலாம்பாள் சரித்திரம் – பி.ஆர். ராஜம் அய்யர்
3) கிளாரிந்தா - மாதவையா
4) நாகம்மாள் - ஆர் சண்முக சுந்தரம்
5) தில்லான மோகனாம்பாள் கொத்தமங்கலம் சுப்பு
6) பொன்னியின் செல்வன் கல்கி
7) வீரபாண்டியன் மனைவி – அரு.ராமநாதன்
௮) சயாம் மரண ரயில் ரெ. சண்முகம்.
9) லங்காட் நதிக்கரை அ.ரெங்கசாமி
10) தீ.எஸ். பொன்னுதுரை.
11) பஞ்சமர் டேனியல்
12) பொய்தேவு - க.நா.சுப்ரமணியம்.
13) வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
14) அபிதா - லா.ச.ராமாமிருதம்.
15) நித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராம்
16) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
17) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன் 
18) மோகமுள் - தி. ஜானகிராமன்
19) மரப்பசு - தி.ஜானகிராமன்
20) வாசவேஸ்வரம் – கிருத்திகா
21) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்
22) சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்
23) பாரீஸிக்கு போ – ஜெயகாந்தன்
24) புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம்
25) கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம்
26) நினைவுப்பாதை - நகுலன்
27) நாய்கள் - நகுலன்
28) ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
29) ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
30) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்சுந்தர ராமசாமி
31) கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்
32) சாயாவனம் - சா. கந்தசாமி
33) தொலைந்து போனவர்கள் சா. கந்தசாமி
34) நாளை மற்றுமொரு நாளே – ஜீ. நாகராஜன்
35) குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
36) கருக்கு -பாமா
37) கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்
38) வாடாமல்லி சு.சமுத்திரம்.
39) கல்மரம் திலகவதி.
40) போக்கிடம் - விட்டல்ராவ்
41) புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
42) கரைந்த நிழல்கள் - அசோகமித்ரன்
43) பதினெட்டாவது அட்சக்கோடு - அசோகமித்ரன்
44) ஒற்றன் - அசோகமித்ரன்
45) இடைவெளி – சம்பத்
46) பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்
47) தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
48) கிருஷ்ணபருந்து - ஆ.மாதவன்
49) அசடு காசியபன்
50) வெக்கை பூமணி
51) பிறகு பூமணி
52) தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்
53) எட்டுதிக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்
54) ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
55) மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
56) சந்தியா - பிரபஞ்சன்
57) காகிதமலர்கள் - ஆதவன்
58) என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
59) ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா
60) உடையார் பாலகுமாரன்
61) கரிசல் பொன்னிலன்
62) கம்பாநதி - வண்ணநிலவன்
63) கடல்புரத்தில் வண்ணநிலவன்
64) பழையன கழிதலும் - சிவகாமி
65) மௌனப்புயல் – வாசந்தி
66) ஈரம் கசிந்த நிலம் – சி. ஆர் ரவீந்திரன்
67) பாய்மரக்கப்பல் பாவண்ணன்.
68) பாழி – கோணங்கி
69) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் தமிழவன்
70) வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன்.
71) கோவேறு கழுதைகள் இமையம்
72) செடல்இமையம்
73) உள்ளிருந்து சில குரல்கள் கோபி கிருஷ்ணன்.
74) வெள்ளாவி – விமல் குழந்தைவேல்
75) கரமுண்டார்வீடு தஞ்சை பிரகாஷ்
76) விஷ்ணுபுரம் ஜெயமோகன்
77) காடு- ஜெயமோகன்
78) கொற்றவை ஜெயமோகன்
79) உப பாண்டவம் எஸ்.ராமகிருஷ்ணன்
80) நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்
81) யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்,
82) கூகை சோ.தர்மன்
83) புலிநகக்கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன்.
84) ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா
85) எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் பேன்சி பனியனும் சாரு நிவேதிதா
86) சொல் என்றொரு சொல் – பிரேம் ரமேஷ்
87) சிலுவை ராஜ் சரித்திரம்ராஜ்கௌதமன்
88) தகப்பன்கொடி – அழகிய பெரியவன்.
89) கொரில்லா – ஷோபா சக்தி
90) நிழல்முற்றம் பெருமாள் முருகன்
91) கூளமாதாரி – பெருமாள் முருகன்
92) சாயத்திரைசுப்ரபாரதிமணியன்
93) ரத்தஉறவு யூமாவாசுகி
94) கனவுச்சிறை தேவகாந்தன் 
95) அளம் தமிழ்செல்வி
96) அலெக்ஸ்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்.எம்.ஜி.சுரேஷ்
97) அரசூர் வம்சம் இரா.முருகன்
98) அஞ்சலை கண்மணி குணசேகரன்
99) குள்ளச் சித்தன் சரித்திரம் யுவன் சந்திரசேகர்
100) ஆழி சூழ் உலகு ஜோ டி குரூஸ் 

நூற்றுக்கு நூறு சரியா போச்சு. 

*****************

நட்புக்கள்  தொடரட்டும்.


Tuesday, 13 September 2011

கூகிள் க்ரோம் ப்ரௌசெரில் ஒரு வலைதளத்தின் Alexa ராங்கை எளிதில் கண்டறிய

கூகிள் க்ரோம் ப்ரௌசெரில் ஒரு வலைதளத்தின் Alexa ராங்கை எளிதில் கண்டறிய......



மேல உள்ள சுட்டியை கிளிக் செய்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு இணைய பக்கம் திறக்கும். 

Sunday, 9 January 2011

34 வது புத்தக கண்காட்சி

நேற்று மாலை 4 :௦௦00 மணி அளவில் நானும் என் மனைவியும் புத்தகக்கண்காட்சிக்கு விரைந்தோம். நிறை மாத கர்ப்பிணியான என் மனைவியை அழைத்து செல்ல விருப்பம் இல்லையென்றாலும் அவளின் ஆசையை புரிந்து கொண்டு அழைத்து சென்றேன்.

நிறைய கூட்டம் இருந்தது. பைக், கார் நிறுத்து இடம் எல்லாம் நிரம்பி வழிந்தது. ஒரு வழியாக வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றால், சில தின்பண்ட கடைகள் தென் பட்டன. அங்கிருந்த பிரம்மாண்ட மேடையில் ஒருவரும் இல்லை.

Sunday, 26 December 2010

டிசம்பர் 26 , 2004௦.

டிசம்பர் 26 , 2004௦. இன்றும் என் வாழ்வில் மறக்க முடியாத தினம்.

ஆகஸ்ட் 2004 :
வழக்கமாக CBSE பள்ளியில் படிக்கும் என் மாமா மகனுக்கு நான் தான் ஹிந்தி  மற்றும்  கணக்கு  பாடம்  தவிர  மீத  பாடங்களை கற்று  கொடுப்பேன். பரீட்சை நேரம் அது.

மறுநாள் சமூக அறிவியல் பரீட்சைக்கு தயார் ஆகிகொண்டிருந்தன் தம்பி.ஆம் என்னை அண்ணன் என்று தான் அழைப்பான் அவன்.

Thursday, 23 December 2010

பாட்டி சொல்லும் கதைகள்

அன்பு  நண்பர்களே, நம்மை இன்றும் தான் பேரன் பேத்திகளாக நினைத்துகொண்டு  நமக்காக மிக அருமையான  கதைகளோடு  காத்துகொண்டிருகிறார்   நமது ருக்மணி பாட்டி.

கதை கேட்க இங்கே  அழுத்தவும் பாட்டி கதைகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...