நேற்று மாலை 4 :௦௦00 மணி அளவில் நானும் என் மனைவியும் புத்தகக்கண்காட்சிக்கு விரைந்தோம். நிறை மாத கர்ப்பிணியான என் மனைவியை அழைத்து செல்ல விருப்பம் இல்லையென்றாலும் அவளின் ஆசையை புரிந்து கொண்டு அழைத்து சென்றேன்.
நிறைய கூட்டம் இருந்தது. பைக், கார் நிறுத்து இடம் எல்லாம் நிரம்பி வழிந்தது. ஒரு வழியாக வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றால், சில தின்பண்ட கடைகள் தென் பட்டன. அங்கிருந்த பிரம்மாண்ட மேடையில் ஒருவரும் இல்லை.
பின்பு நுழைவு சீட்டு வாங்கி உள்ளே சென்று, முதல் கடைகளில் இருந்து ஆரம்பித்தேன். என் மனைவி இறுக்கமாக என் கைகளை பிடித்து கொண்டால். சற்று தொலைவில் மனுஷ்யபுத்திரன் தென்பட்டார் ஒரு கடைக்கு முன்பாக. ஆம், அது தான் உயிர்மையின் கடை.
உடனே உயிர்மைக்கு விரைந்தேன். மனுஷ்யபுத்ரனை தாண்டி சென்ற போது அவர் தன் நண்பரிடம்,"கூட்டம் அதிகமா இருக்கு,hand bill போட சொல்லு என்று கூறிகொண்டிருந்தார்".
அவரை கடந்து உள்ளே சென்றால், நல்ல கூட்டம் தான். சாருவின் புத்தகம் எல்லாம் அடுக்கி வைக்க பட்டு இருந்தது. இளைஞர் கூட்டம் சாருவின் புத்தகங்களையே நோட்டம் விட்டு கொண்டிருந்தனர். நான் அவரது புதிய ஏழு புத்தகங்களையும் வெளியீடு அன்றே வாங்கி விட்டதால் நான் அப்பக்கம் செல்லவில்லை. இருந்தாலும் அந்த ஏழு புத்தகங்களையும் கொண்டு பொய் இருந்தேன் சாருவின் கை எழுத்திற்காக. ஆனால் சாரு அங்கு இல்லை. எனக்கு உயிர்மையில் எழுதும் பிற எழுத்தாளர்களை பற்றி அவ்வளவாக தெரியாத காரணத்தினால், வேறு யாருடைய புத்தகமும் வாங்கவில்லை.
ஒரு பக்கம் மனைவியின் முகத்தை பார்த்தால் அவள் என்னை விட அதிக ஆர்வமாய் இருந்தால். ஆங்காங்கு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர்.அதுவேறு பயம் எனக்கு எங்கே என் மனைவியின் வயிற்றில் இடித்து விடுவார்களோ என்று.அதனாலேயே சிறுவர்கள் இருக்கும் கடை பக்கம் செல்ல வில்லை.
பின்பு, நர்மதா, மணிமேகலை, கிழக்கு, நக்கீரன் பதிப்பகம் போன்ற கடைகளுக்கு சென்றேன். கிழக்கில் சுஜாதாவின் புத்தகங்கள் அடுக்கி வைக்க பட்டு இருந்தது. அதில் பலவற்றை சினிமா படமாக பார்த்தால், சுஜாதாவின் புத்தகங்கள் எதையும் வாங்கவில்லை.
நக்கீரனில் வீரப்பன் பற்றிய புத்தகங்கள் அதிகம் இருந்தது. ஆனால், எல்லா புத்தகங்களும் அரத பழசாக இருந்தது. பின்பு சில கடைகளில், குழந்தை வளர்ப்பு பற்றிய புத்தகங்களை என் மனைவி வாங்கினால்.
பின்னர் கண்ணதாசன் பதிப்பகத்தின் கடைக்கு சென்றோம்.அங்கு எனக்கு விருந்தாக மூன்று புத்தகங்கள் கிடைத்தது.மூன்றுமே முத்துக்கள்.(அது என்ன புத்தகம், யாருடையது என்பது வரும் நாட்களில் எழுதுகிறேன்.)மூன்றையும் வாங்கிவிட்டு வெளியே வந்தோம். என் மனைவியின் முகத்தில் சிறிது களைப்பு தெரிந்தது. பின்பு கிளம்பலாம் என்று முடிவு செய்து வெளியே வரும் வழியில் ஞானி அவர்கள் சூடாக பெட்டி தந்து கொண்டிருந்தார் ஒரு அழகு பதுமையிடம்.
பின்பு கண்காட்சிக்கு வெளிய வந்தோம்.மேடையில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேசி கொண்டிருந்தார். ஏதோ புதிய புத்தக வெளியீடு போல.
பின்பு popcorn , fruit salad -ஐ சுவைத்து விட்டு வெளியே வந்தோம்.
அடுத்த முறை என் நண்பர் பாபுவுடன் வரலாம் என்று இருக்கிறேன். அவரும் மனைவியை விட்டு வந்தால் நன்றாக இருக்கும்.
புத்தக கண்காட்சி நடந்த கவியரங்கம் நிகழ்சியில் கவி மார்கண்டேயர் வாலி அவர்களின் அசத்தலான பேச்சின் ஒரு பகுதி இங்கே.
ReplyDeletehttp://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteதிரு.அநாதமேயர் அவர்களுக்கு, தங்களின் வாதம் நன்று, ஆனால் அனாதமேயராக வந்து சந்தில் சிந்து பாடுபவனை எல்லாம் நாங்கள் பொருட்டாகா எண்ணுவதில்லை, இதுவும் அவன் வேலைதானோ ?!!!
ReplyDelete