சமீபத்தில் விருதகிரி படம் பார்க்க நேர்ந்தது.படத்தில் பல திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.
படத்தின் முன் பாதியில் விஜயகாந்த் அவர்களுக்காக குரல் கொடுத்தது போல் இருந்தாலும் மற்ற நடிகர்கள் அவர்களை ஏளனம் செய்வது போலத்தான் காட்சி படுத்திருக்கிறார் விஜயகாந்த்.
கல்கி என்னும் திருநங்கை ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தி கொண்டிருப்பதாக தகவல். ரோஸ் என்னும் திருநங்கை மீடியாவில் கலக்கி கொண்டிருக்கிறார்.
திருநங்கைகள் படும் அவலமும் அவர்களால் பிறர் படும் அவலங்கள் நமக்கு தெரிந்தவைதான்.
நான் ஆரம்ப காலங்களில் மின்சார ரயில் மூலமாக அலுவலுகத்திருக்கு வந்து செல்பவன். ரயிலில் எங்கோ ஒரு மூலையில் திருநங்கைகள் கை தட்டி ஓசை எழுப்பும் சத்தம் கேட்டால், உடனே பையில் இருக்கும் சில்லறை எடுத்து கையில் வைத்து கொண்டு அவர்களுக்கு பிச்சை போட காத்திருப்பேன். அவர்களை கண்டால் அவ்வளவு பயம் எனக்கு.
ரயிலில் மட்டுமல்லாமல் பொது இடங்களில் பலரை கிள்ளுவதும், முத்தம் கொடுப்பதும், கண்ட இடங்களில் தொடுவதுமாய் இருப்பார்கள். சில சமயங்கள் சில ஐயோக்கியன்களிடமும் மாட்டி கொண்டும் முழிப்பார்கள். நம் நாட்டின் பல்வேறு இடங்களில் அவர்கள் விபச்சாரத்தில் ஈடு படுகின்றனர். சிலர் விபச்சார மையம் வைத்து நடத்துகின்றனர்.
இப்படி வழி தவறி, பலர் வாயில் விழுந்து, வாழ வழியில்லாமல், பலர் ஏளனத்திற்கு ஆளாகும் அவர்களுக்கு நல் வாழ்வு அமைக்க யாரும் முன் வருவதில்லை. இந்த ரோஸும் ,கல்கியும் கூட தங்களுக்காகத்தான் வாழ்கிறார்கள் தவிர தங்கள் மக்களுக்காக வாழ்வதில்லை.
மகளிர் சுய உதவி குழுவைப்போல் திருநங்கைகள் சுய உதவி குழு, முதியோர் கல்வி மையம் போல் திருநங்கைகள் கல்வி மையம், சிறு தொழில் வேலைவாய்ப்பு மையம், உயர் கல்விக்கான ஊக்கதொகை, எல்லா இடங்களிலும் 10 % இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் கிடைத்தால் அவர்களுக்குள் மறுவாழ்வு கிடைத்து பல மற்றம் ஏற்படும்.
நாளை, திருநங்கைகள் மருத்துவர் , வக்கீல், தொழிலதிபர் என்று பல வகைகளில் புகழப்படுவார்கள் தானே ? இது போன்ற சில சலுகைகள் கிடைத்தால்?
உங்களுக்கு தகவல், போராட்டமே வாழ்க்கை என்பதுடன், பலருக்கு நல்ல முறையில் அறிமுகம் ஆகி எழுதுவதிலும் கலக்கும் ஒரு திருநங்கை பதிவராகவும் இருக்கிறார். அவர் பெயர் லிவிங் ஸ்மைல் வித்யா
ReplyDeleteதகவலுக்கு மிக்க நன்றி சார். வித்யாவின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். அதோடு இன்று முதல் அவரது பதிவை படித்து மேலும் பலவற்றை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
ReplyDelete// ரயிலில் எங்கோ ஒரு மூலையில் திருநங்கைகள் கை தட்டி ஓசை எழுப்பும் சத்தம் கேட்டால், உடனே பையில் இருக்கும் சில்லறை எடுத்து கையில் வைத்து கொண்டு அவர்களுக்கு பிச்சை போட காத்திருப்பேன். அவர்களை கண்டால் அவ்வளவு பயம் எனக்கு //
ReplyDeleteநானும் அப்படித்தான்...
இந்தப் பதிவர் 'வாழும் புன்னகை வித்யா'- ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். படித்துப்பாருங்கள்.
ReplyDelete