Sunday 9 January, 2011

சாரு நிவேதிதாவுக்கு ஓர் கடிதம் - மிஷ்கின் பேசாதது பலரால் பேசப்பட்டது, புகழப்பட்டது.

அன்புள்ள சாரு,

தங்களின் வலைத்தளத்தில் புத்தக வெளியீட்டு விழா என்னும் தலைப்பு பல வாரங்களாக ஓடி கொண்டிருகிறது. சமீபத்தில் “மிஷ்கினை விட்டு விடுங்களேன்; பாவம்” என உங்களுக்கு கடிதங்கள் வந்து கொண்டிருக்கிறது என்று வலைத்தளத்தில் கூறியிருகிறீர்கள். இந்த கடிதமும் அது சம்பந்தபட்டது தான்.

தங்களின் ஏழு புத்தகங்களில் தேகம் நாவல் தான் பலரை சென்றடைந்துள்ளது என்று நான் ஆணித்தரமாக கூறுவேன். அதற்க்கு எடுத்துக்காட்டு பலர் தங்கள் வலைத்தளத்தில் எழுதிய மதிப்பீடு தான்.

சரசம் சல்லாபம் சாமியார்க்கு நான் எழுதிய சின்ன மதிப்பீடு தவற வேறு எந்த புத்தகத்திற்கும் இது  வரை யாரும் மதிப்பீடு எழுதவில்லை என்று நினைக்கிறன்.

ஆனால் தேகத்திற்கோ மதிப்பீடு மேல் மதிப்பீடு வந்து குவிகிறது. மிஷ்கின் பேசாதது பலரால் பேசப்பட்டது, புகழப்பட்டது.

சாரு, உங்களை பற்றி  உங்கள் வாசகர்களாகிய எங்களுக்கு நன்றாக  தெரியும். அதனால் மேடையில் மிஷ்கின் உங்களை சீண்டியதும் தன் அருமை பெருமைகளை பேசியதும் மறந்து அவரை மன்னித்துவிடவும்.


இப்படிக்கு,
அருண் குமார்.

No comments:

Post a Comment

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...