Tuesday 25 January, 2011

அந்த மூன்று புத்தகங்கள்

நண்பர்களே, கொஞ்சம் வேலை பளுவினால் கடந்த 1 வாரத்திற்கு மேல் நீ நான் உலகத்திற்கு என்னால்  வர முடியவில்லை.

34 வது புத்தக கண்காட்சி என்ற பதிப்பில் நான் மூன்று புத்தகங்கள் வாங்கிருந்தேன் என்று சொன்னேன் அல்லவா. அவை கண்ணதாசன் பதிப்பகத்தாரின்

  • பாக்யராஜ் பதில்கள்  பாகம் - 1
  • பாக்யராஜ் பதில்கள்  பாகம் - 2
  • பாக்யராஜ் பதில்கள்  பாகம் - 3
  •  
ஆம், நடிகர் பாக்யராஜின் பதில்கள் தான் அவை. பாக்யராஜ் ஒரு சிறந்த நடிகர், இயக்குனர் என்பதை விட மிக சிறந்த பத்திரிக்கை ஆசிரியர் என்று நமக்கு தெரியும்.


அவரின் பாக்யா இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் பாக்யராஜ் பதில்களின் தொகுப்பு தான் இந்நூல்கள். கண்ணதாசன் பதிப்பகத்தாரின் அற்புத முயற்சி இது.

என் சிறு வயதிலேயே என் தந்தையும்  தாயும் பாக்யாவின் தீவிர வாசகர்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் மூலம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்ட நான், பின்னாளில் பாக்யாவின் தீவிர ரசிகன் ஆனேன். புத்தகம் வந்ததும் முதல் வேலை
பாக்யராஜ் பதில்கள் படிப்பதுதான்.

வாசகர்களின் ஒவ்வொரு கேள்விக்கும், அழகான அருமையான சின்ன உவமையோடு பதில் தருவது பாக்யராஜை மிஞ்ச யாராலும் முடியாது என்பது என் கூற்று. எப்பேர்பட்ட கேள்விக்கும் பதில் தரும் வல்லமை அவரிடம் உண்டு.

மூன்று புத்தகங்களையும் மூன்று முறை படித்து விட்டேன், இன்னும் அலுப்பு தட்டவில்லை. நண்பர்களே நீங்களும்   பாக்யராஜ் பதில்களை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிய வைக்கவும்.


7 comments:

  1. தங்கள் பிளாகில் என்னை சோ்த்ததற்கு நன்றி..

    லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க.தங்கள் கருத்திற்கும் , ஓட்டிற்கும் வெய்டிங்..
    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9399.html

    ReplyDelete
  2. Tamilmanam ல் ஓட்டு போட்டீங்களா?

    ReplyDelete
  3. நீங்கள் இந்த அளவிற்கு சிலாகிப்பதை பார்க்கும்போது கொஞ்சம் ஆர்வம் எட்டிப் பார்க்கிறது... வாங்கிப் படிக்க முயற்சி செய்கிறேன்...

    ReplyDelete
  4. இவங்களையும் பாருங்க பகுதியில் என்னுடைய வலைப்பூவுக்கும் லிங்க் கொடுத்திருப்பதை இன்றுதான் பார்க்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  5. முடிந்தால் பின்னூட்டம் போடும்போது வரக்கூடிய word verification-ஐ நீக்கவும்...

    ReplyDelete
  6. தங்கள் கருத்திற்கு நன்றி. தங்கள் கூறியது போல் word verification -ஐ நீக்கி விட்டேன்.



    மேலும் நீங்களும் பாக்யராஜின் புத்தகங்களை படித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...