இனி ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும், தை முதல் தேதி தமிழ் புத்தாண்டு என்பது ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் 2008ம் ஆண்டு, தை முதல் நாள் தான் (பொங்கல் தினம்) தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அதிமுக அரசு இப்போது ரத்து செய்துள்ளது.
இனி ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும், தை முதல் தேதி தமிழ் புத்தாண்டு என்பது ரத்து செய்யப்படுவதாகவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
அதில், தொல்லியல், வானியல் நிபுணர்களின் கருத்தை ஏற்று புத்தாண்டு தினம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பல்லாண்டு கால வழக்கத்துககு மாறனது என்பதால் அதைத் தொல்லியல் நிபுணர்கள் மாற்றக் கூறியதாகவும், இதனால் தான் 2008ஆம் ஆண்டு இது தொடர்பாக திமுக கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்வதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அரசின் இந்த புதிய அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால், இதுகுறித்து பாமக எம்எல்ஏக்கள் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தனர். திமுக உறுப்பினர்கள் சட்டசபையைப் புறக்கணித்து வருவதால், இன்றும் அவர்கள் அவைக்கு வரவில்லை.
நன்றி: தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment
என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.