Wednesday, 15 December 2010

சாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள்

வாழ்கையில் நான் கலந்து கொண்ட முதல் புத்தக வெளியீட்டு விழா இது.


குமுதம்,குங்குமம், விகடன் மட்டுமே படித்து கொண்டிருந்த நான், இந்திரா சௌந்தரராஜன் அவர்களது சில புத்தகங்களை வாங்கி படித்தேன் (சிறு வயதில் நான் பார்த்த அவரது  கதைகளில் உருவான சீரியல்களால் ஏற்பட்ட  தாக்கத்தினால்).புதிய அனுபவம் கிடைத்தது.


பின்னர் ஒரு நாள் நண்பர் மூலம் சாரு பற்றி கேள்வி பட்ட நான்,அவருடைய இணையதளம் மூலம் அவரை பற்றி மேலும் தெரிந்து, படித்து கொண்டேன்.அவரது எழுத்துகளால் உதிர்த்த மூன்று புத்தகங்களை வங்கி படித்து பத்திரமாக வைத்து இருக்கிறேன்.


இன்று வரை ஒரு நாளும் அவர் வலைத்தளத்தை படிக்காமல் இருந்ததில்லை.அவரால் பெரிதும் ஈர்க்க பட்டேன்.


கதைக்கு வருவோம்:

டிசம்பர் 13 மாலை 5 :45 க்கு, காமராஜர் அரங்கத்திற்கு சென்றடைந்தேன்.வாயிலில் ஒரு பெண்மணி எல்லோரையும் மிக அன்பாக  வரவேற்று கொண்டிருந்தார்.அப்போதுதான் கணிமொழி,தமிழச்சி மற்றும் பாலகுமரன் வந்திறங்கினர்.


 அவர்களையெல்லாம் தாண்டி உள்ளே சென்றால் உயிர்ம்மை பதிப்பகத்தினர் ஒரு மேஜையில் சாருவின் 7 புத்தகங்கள் விற்று கொண்டிருந்தனர். சற்றும் தாமதிக்காமல் 7 புத்தகங்களையும்  வாங்கி என் பையினுள் வைத்துவிட்டேன்.


பிறகு நாலடி எடுத்து வைத்ததும் ஒருவர் சிரித்த முகத்தோடு தண்ணீர் பாட்டிலும் சில தின் பண்டங்களும் கொடுத்தார்.அதையும் வங்கி கொண்டு உள்ளே சென்றால் அப்பப்பா எவ்வளவு  பெரிய அரங்கம் அருமையான இசையால் மிதந்து கொண்டு இருந்தது.


நடு வரிசை ஒரு சீட்டில் இடம்  பிடித்து கொண்டேன்.அப்போது மிஷ்கினும் மதனும் என்னை கடந்து சென்றார்கள். ஆர்வம்  அதிகரித்து விட்டது.


மேடையில் பிரம்மாண்டமான பேனரில் சாருவுடைய போட்டோவும் அவரது புதிய புத்தகங்களின் முகப்பும் பொறிக்கப்பட்டு இருந்தது .


சிறிது நேரத்தில் சாரு கண்ணில் தென்பட்டார்.வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க தொடங்கினேன்.சிறிது நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க ஆரம்பித்தது.
ஒரு பெண் வர்னையாளரும் ,மனுஷ்ய புத்திரனும் மேடையில் தோன்றினர். பிறகு வந்திருந்த அணைத்து cheif  guest -களும் அந்த பெண்மணியால் அழைக்கப்பட்டு மேடையில் தோன்றினர்.


பின்னர் சாருவின் புத்தகங்களை திரு. நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட சாருவின் அன்பு நண்பர்கள் பெற்று கொண்டனர்.அப்போது தான் தெரிந்தது அவந்திகா அம்மா  தான் வாயிலில் அனைவரையும் அன்பாக வரவேற்று கொண்டிருந்த பெண்மணி என்று.முன்பே தெரிந்திருந்தால் அவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றிருப்பேன் அவரது அன்புள்ளத்திர்காக ( சாருவின் எழுத்து மற்றும் இணையம் மூலம் அவரை பற்றி தெரிந்திருக்கிறேன்).






பின்னர் சாருவின் ஒவ்வொரு புத்தகங்கள் பற்றி ஒவ்வொரு பிரபலங்கள் பேசினர்.தமிழச்சி, மதன் மற்றும் எஸ்ரா அவர்களது பேச்சு மிக அருமை. மற்றவர்கள் பற்றிய விமர்சனம் இங்கு தேவை இல்லை.


பின்னர் முடிவுரைக்காக நம் சாரு மேடையில் தோன்றியதும் கை தட்டல், விசில்கள் பறந்தது. பின்னர் பேசிய சாரு மென்மையாக, அருமையாக பேசி நன்றி தெரிவித்து கொண்டார்.


விழா முடிந்ததும் வெளியில் சாருவை மிக அருகில் கண்டேன்.உண்மையிலேயே சூப்பர் ஹீரோ போல்தான் இருந்தார்.புத்தகங்களை  நீட்டி ஆட்டோகிராப் கேட்டேன்,இப்பொழுது வேண்டாம் புத்தக கண்காட்சிக்கு வாங்க  ஆட்டோகிராப்  தருகிறேன் என்று கூறினார்.மன சங்கடமான சூழ்நிலையில் ஒரு போட்டோ எடுத்து கொள்ளலாம் என்று பையை பார்த்தல்  உள்ள கேமரா இல்லை. மறதியால் மனம் வருந்தினேன்.


அனாலும் ஒரு சந்தோஷம் சாரு என் முதுகில் தட்டி கொடுத்தார்,ஆட்டோகிராப் கேட்டதற்கு.  கண்டிப்பாக இந்த ஏழு புத்தகங்களிலும் ஒரு நாள் ஆட்டோகிராப் வாங்கிவிடுவேன்.

2 comments:

  1. //பிறகு நாலடி எடுத்து வைத்ததும் ஒருவர் சிரித்த முகத்தோடு தண்ணீர் பாட்டிலும் சில தின் பண்டங்களும் கொடுத்தார்//

    அது, நானும் எனது நண்பர்களும் தான் :-) மைசூர்ப்பாகும் மிக்சரும் நல்லா இருந்ததா? :-)

    ReplyDelete
  2. 2000 பேருக்கு Rs 40000 செலவு செய்ய யாரோ ஒரு புண்யவான் ஒப்புக்கொண்டதாகவும் சமோசா மற்றும் டீ கொடுக்கப்படும் என்றும் சாரு எழுதியிருந்தார். இங்க என்னாடா என்றால் மிக்சர் மிக்ஸ் அப் ஆயிடுத்தே !!

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...