குடித்து விட்டு வண்டில் ஓட்டினால் அபராதம் மேலும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்/அபகரிக்கப்படும் என்பது செய்தி.
அன்பர்களே நண்பர்களே , பார் என்ற ஒன்று இருப்பதனால் தானே குடிமகன்கள் குடித்து விட்டு வீட்டிற்கு செல்கின்றனர். மேலும் வகைதொகையாக கப்பம் கட்டுகிறார்கள் . சிலர் மட்டையாகி சாலையில் செல்லும் சிலருக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள் .பாதி பேர் விபத்துகுளாகின்றனர்.இது போல சில இன்னல்கள் அவர்களுக்கும் அவர்களால் பலருக்கும் ஏற்படுகிறது.
அரசு கல் ஒழிப்பு திட்டம்,மது ஒழிப்பு திட்டம் போல் பார் ஒழிப்பு திட்டம் என்ற ஒரு திட்டம் கொண்டு வர வேண்டும்.அல்லது குடித்து விட்டு வண்டில் ஓட்டினால் அபராதம் மேலும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்/அபகரிக்கப்படும் என்ற சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும். (பார் இருப்பது அரசுக்கும் போக்குவரத்துக்கு காவல் துறையினருக்கும் மட்டுமே லாபகரமான ஒன்று.)
தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளி விடுவது சரியா?
ஹலோ, அரசு என்ன குடித்தாலே அபராதம் என்றா சொல்கிறது ? குடித்து விட்டு வாகனம் ஓட்ட கூடாது என்று தானே சொல்கிறது. இது எப்படி தொட்டிலையும் ஆட்டி பிள்ளையும் கிள்ளுவதாகும் ?? வேண்டுமானால் வாகனத்தில் வருபவர்களுக்கு பாரில் அமர்ந்து குடிக்க அனுமதி இல்லை, வேண்டுமானால் பார்சல் வாங்கி வீட்டுக்கு சென்று குடியுங்கள் என்று அறிவுறுத்தலாம்.
ReplyDelete