Sunday, 26 December 2010

டிசம்பர் 26 , 2004௦.

டிசம்பர் 26 , 2004௦. இன்றும் என் வாழ்வில் மறக்க முடியாத தினம்.

ஆகஸ்ட் 2004 :
வழக்கமாக CBSE பள்ளியில் படிக்கும் என் மாமா மகனுக்கு நான் தான் ஹிந்தி  மற்றும்  கணக்கு  பாடம்  தவிர  மீத  பாடங்களை கற்று  கொடுப்பேன். பரீட்சை நேரம் அது.

மறுநாள் சமூக அறிவியல் பரீட்சைக்கு தயார் ஆகிகொண்டிருந்தன் தம்பி.ஆம் என்னை அண்ணன் என்று தான் அழைப்பான் அவன்.

என்னிடம்  புத்தகத்தை கொண்டு வந்தவன், "அண்ணா இந்த lesson மட்டும் புரிய மாட்டிக்கு,தமிழ சொல்லிக்குடுங்களேன்" என்றான்.

பாடத்தின் பெயரை பார்த்தேன் "Natural Disaster " இயற்கை சீற்றங்களை பற்றிய பாடம் அது. புயல், வெள்ளம், நில நடுக்கம்  போன்ற பல இயற்கை சீற்றங்களை பற்றிய குறிப்புகளும் அவை பெரிய விதமாய் தாக்கிய நாட்களும் தான் அந்த பாடம்.

அப்பொழுது புதிதாய் ஒரு பெயர் பார்த்தேன் "Tsunami " என்று இருந்தது.A Tsunami  or Tidal wave is a series of water waves caused by the displacement of a large volume of a body of water என்று ஆரம்பித்து படக்குறிப்புகளுடன் இருந்தது.எனக்கே அந்த "டிசுனாமி"(அப்பொழுது இப்படித்தான் படித்தேன்) பற்றி சுத்தமாக  தெரியாதலால் இது வராது நீ படிக்க தேவையில்லை என்று கூறிவிட்டேன்.

அவன் என்னை விடவில்லை.அது எப்படி  வரும், எங்க வரும் என்ற கேள்வி கணைகளால் என்னை தாக்கி கொண்டிருந்தான். எனக்கே தெரியாதுடா இனி வந்தாதான் தெரியும் என்று கூறிவிட்டு என் வேலையை தொடர்ந்தேன்.

கடவுள் புண்ணியத்தில் டிசுனாமி பற்றிய எந்த கேள்வியும் பரிட்சையில் வரவில்லை.

டிசம்பர் 25 , 2004௦.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக முடிந்தது.

டிசம்பர் 26 , 2004௦.
காலை அனைவரும் எழுந்து டிவி பார்த்து கொண்டிருந்தோம்.ஞாயிற்று கிழம்மை என்பதால் அனைவருக்கும் விடுமறை. சன் டிவி யில் காலை 8 மணி செய்தி போடப்பட்டது.  செய்தி: இந்தோனேசியாவில்  பூகம்பத்தினால்  ஏற்பட்ட  சுனாமியால்...........

அன்றுதான் எங்களுக்கு தெரிந்தது அது டிசுனாமி அல்ல உலகத்தையே பயப்பட வாய்த்த சுனாமி என்று.


அடுத்து வர முழு ஆண்டு பரிட்சைல கண்டிப்பா இந்த கேள்வி கேப்பாங்க தேதியோட எழுதுடா என்று கூறினேன் அவனிடம்.

No comments:

Post a Comment

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...