Wednesday, 29 December 2010

சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம். (1)

ஆஹா பதில் கிடைத்து விட்டது.
(பார்க்க : http://charuonline.com/blog/?p=1598)

கேள்வி பதில்

2.நீங்கள் தானே தினமலரில் எழுதும் அந்துமணி?

அருண் குமார்

பதில்:
ஆம்; நானேதான்.  அந்துமணி என்ற பெயரில் மட்டும் அல்ல; பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன், புஷ்பா தங்கதுரை, ராஜேஷ் குமார், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் போன்ற பெயர்களில் எழுதுபவனும் நானே.  ஞாநி என்ற பெயரில் கல்கியில் இப்போது அரசியல் கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  தமிழில் மட்டும் அல்ல; துருக்கியிலும் ஓரான் பாமுக் என்ற பெயரில் எழுதி வருகிறேன்.  சந்தேகம் இருந்தால் கீதையின் இந்த ஸ்லோகங்களைப் பார்த்துக் கொள்ளவும்.

ஸ்ரீபகவான் கூறுகிறார்: “பார்த்த! இப்பொழுது நீ என்னுடைய நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் பற்பல விதங்களாகவும் பல நிறங்களும் பல உருவங்களும் கொண்டவையாகவும் உள்ள தெய்வீகமான உருவங்களைப் பார்.
(அத்தியாயம் 11, ஸ்லோகம் 5)

20.12.2010.
11.24 a.m.
Comments are closed.

ஆகா, சாரு என்னை கலாய்ச்சிடாரே.

அனாலும் அவர் பதிலை விட அவர் மேற்கோள் காட்டிய கீதையின் ஸ்லோகம் மிக அருமை.

No comments:

Post a Comment

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...