இந்தியாவின் பாரம்பரியமிக்க நகரங்களுக்கிடையே இயக்கப்படும் அதிநவீன சொகுசு ரயில், "மகாராஜா எக்ஸ்பிரஸ்".ஆசியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான ரயில் என்ற பெயருடைய மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே மற்றும் காக்ஸ் அன்ட் கிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை மேற்கொண்டுள்ளது.
நவீன சொகுசு சுற்றுலா ரயில் மகாராஜா எக்ஸ்பிரஸ். இந்தியாவின் பாரம்பரியமிக்க, முக்கிய சுற்றுலா தலங்களை வெளிநாட்டு பயணிகளும், உள்நாட்டு பயணிகளும் கண்டுகளிக்க இந்த ரயில் உருவாக்கப்பட்டது. டில்லி - மும்பை, டில்லி - கோல்கட்டா நகரங்களுக்கிடையே இந்த சொகுசு ரயில் இயக்கப்படுகிறது. மொத்தம் 23 கோச்சுகள் கொண்ட இந்த ரயில், சொகுசு இருக்கைகள், முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. ஒரு கோச் முழுவதும் அதிநவீன வசதி கொண்ட மகாராஜா சூட், நான்கு கேபின்களுடன் ஐந்து டீலக்ஸ் சூட், மூன்று கேபின்களுடன் ஆறு சிறிய சூட்கள், இரண்டு கேபின்களும் இரண்டு சூட்கள் இவற்றில் உள்ளன. ஒரே நேரத்தில் 42 பேர் உணவருந்தும் வகையில் ரெஸ்டாரென்ட், பார், சினிமா தியேட்டர் என பல வசதிகள் உள்ளன. இந்த ரயிலில் 88 பயணிகள் பயணம் செய்யலாம். இந்த சொகுசு ரயிலில் பயணிக்க நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாயும் அதற்க்கு மேலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வளவு நவீன வசதிகள் கொண்ட மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் உருவானது, சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் என்பது குறிப்பிடத்தக்கது.
super train super photos
ReplyDelete